‘Mask’ Trailer and Music Launched in Style

‘தி ஷோ மஸ்ட் கோ ஆன்’ மற்றும் ‘பிளாக் மட்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, எஸ்.பி. சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் ‘மாஸ்க்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம், ஒரு வித்தியாசமான கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. விழாவில் விஜய் சேதுபதி, ஜீவி பிரகாஷ், நெல்சன், சுப்பிரமணியம் சிவா, பவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து சிறப்பித்தனர்.

இயக்குநர் வெற்றிமாறன், “மாஸ்க் படத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர். இது குரலற்றவர்களின் குரல் பேசும் படம்” என கூறினார்.

நடிகர் விஜய் சேதுபதி, “டிரெய்லர் மிக அருமையாக இருந்தது. கவின் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் தைரியம் பாராட்டத்தக்கது” என வாழ்த்தினார். ஆண்ட்ரியா ஜெரேமியா, “இது எனக்கு சிறப்பான திருப்புமுனை படம். அனைவரின் உழைப்பும் திரையில் வெளிப்படும்” எனக் கூறினார்.

இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணியை ஆர். ராமர் மேற்கொண்டுள்ளார்.

‘தி ஷோ மஸ்ட் கோ ஆன்’ மற்றும் ‘பிளாக் மட்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, எஸ்.பி. சொக்கலிங்கம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘Mask’ Trailer and Music Launched in Style – Starring Kavin, Andrea Jeremiah, and Ruhani Sharma

The trailer and music launch of the upcoming Tamil film Mask was held in Chennai with much fanfare. Produced by Andrea Jeremiah and S.P. Chockalingam under The Show Must Go On and Black Madras Films, the film is directed by debutant Vikarnan Ashok under the creative supervision of acclaimed filmmaker Vetri Maaran.

Featuring Kavin, Andrea Jeremiah, and Ruhani Sharma in lead roles, Mask is said to be a distinct commercial entertainer with an unconventional storyline. The grand launch event witnessed the presence of several industry celebrities, including Vijay Sethupathi, G.V. Prakash Kumar, Nelson, Subramaniam Siva, Pavan, and Redin Kingsley, among others.

Speaking at the event, Vetri Maaran lauded the team’s effort, saying, “Mask is a film created with deep commitment and sincerity. It gives a voice to the voiceless.”

Actor Vijay Sethupathi praised the trailer and added, “Kavin deserves credit for consistently choosing unique scripts.”
Producer-actress Andrea Jeremiah described Mask as “a special turning point in my career,” adding that “the hard work of everyone involved will shine through on screen.”

The film features music composed by G.V. Prakash Kumar, cinematography by R.D. Rajasekhar, and editing by R. Ramar.

Mask, jointly produced by The Show Must Go On and Black Madras Films, hits theatres worldwide on November 21, 2025.

Andrea JeremiahEditor Ramargv prakashKavinMaskRD RajasekarRuhani SharmaVetri MaaranvetrimaranVikarnan Ashok
Comments (0)
Add Comment