அனபெல் சுப்ரமணியம் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ‘ஜாங்கிரி’ மதுமிதா

தீக்காயத்துடன் வலியை பொறுத்துக்கொண்டு நடித்த ‘ஜாங்கிரி’ மதுமிதா

மயங்கி விழுந்த ‘ஜாங்கிரி’ மதுமிதா ; விஜய்சேதுபதி படப்பிடிப்பில் பரபரப்பு

விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல் சுப்ரமண்யம்.. பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்..

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜெய்ப்பூரில் துவங்கி நடைபெற்றது.

இந்த படப்பிடிப்பின்போது மதுமிதா காட்டிய அர்ப்பணிப்பு உணர்வை படக்குழுவினர் ரொம்பவே சிலாகித்து பேசி வருகின்றனர்.

ஒருநாள் வேகமாக சமைக்கும் சமையல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் மதுமிதா பங்குகொண்டு வேகவேகமாக சமையல் செய்யவேண்டும்..

அப்போது எதிர்பாராத விதமாக சூடான எண்ணெய் தெறித்து, மதுமிதாவின் இடுப்பு பகுதியில் காயத்தை ஏற்படுத்தியது..

ஒருபக்கம் வலியால் துடித்தாலும், மிகப்பெரிய அளவில் செலவு செய்து படமாக்கப்படும் காட்சி என்பதாலும், அதில் தனது பங்களிப்பு முக்கியமானது என்பதாலும் தன்னால் படப்பிடிப்பு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக வலியை வெளிக்காட்டி கொள்ளாமல் அந்த காட்சியில் நடித்து முடித்துள்ளார் மதுமிதா.

அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்த பின்னரே இந்த விஷயம் படக்குழுவினருக்கு தெரியவந்திருக்கிறது. காயம்பட்ட இடமே ஒரு வடுவாக மாறியுள்ளது மதுமிதாவுக்கு.

அதன்பின் மதுமிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.. காயத்தை உடனே சொல்லாமல் மறைத்ததற்காக இயக்குநர் மற்றும் யூனிட்டினர் மதுமிதாவை அன்புடன் கடிந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல விரதம் மேற்கொள்வதை தவறாமல் கடைப்பிடித்து வருபவர் மதுமிதா. ஒருநாள் படப்பிடிப்பின்போது விரதம் மேற்கொண்ட மதுமிதா, நாள் முழுவதும் உணவருந்தாமல் படப்பிடிப்பில் நடித்துள்ளார்.. அன்றைய தினம் இரவு நேர படப்பிடிப்பும் தொடரவே, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் மதுமிதா.

பதறிப்போன படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மயக்கம் தெளிவிக்க, அதன்பிறகும் கூட, தன்னுடைய காட்சியில் நடித்து முடித்த பின்பே சாப்பிட சென்றிருக்கிறார் மதுமிதா.

தன்னால் படக்குழுவினருக்கு சிறிய அளவில் கூட பாதிப்பு வந்துவிடக் கூடாது என்கிற மதுமிதாவின் எண்ணத்தை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.