பொள்ளாச்சி சம்பவம் படமாகிறது சூர்யா நடிக்கிறார்?

சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. பல இளம் பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை திரைக்கதையாக உருவாக்கி, படமாக்கி வருவதாகவும் பாலியல் குற்றவாளிகளை தேடிப்பிடித்து தண்டிக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.இப்படத்தை பசங்க பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.இதற்கு தற்போது சூர்யா 40 என தலைப்பு வைத்துள்ளார்கள் ஆனால் படக்குழுவினர் தரப்பில் இந்த தகவல் பொய்யானது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் கதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.