கல்லா கட்டாதுன்னு தெரிஞ்சா கிட்டவே வராதேன்னு சொல்லும் கட் அண்ட் ரைட் பார்ட்டி ஓடிடி

யங் மங் சங், பொன் மணிக்கவேல், தேள், ஊமை விழிகள், பஹீரா, நைட் டான்ஸர்(இந்தி)…இப்படி வரிசையாக இருக்கும் படங்கள் பிரபுதேவா நடித்து கால், அரை, முக்காலுமாக நிற்கின்றன. இதற்கிடையில் குலேபகாவலின்னு படம் எடுத்த கல்யாண் டைரக்‌ஷனில் ஒரு புது படத்தில் கமிட்டாகியுள்ளாராம் நடிகர் பிரபுதேவா. இந்தப் படத்திற்கு ஒரு பெரிய சம்பளம் பேசி அதை மொத்தமாகவே வாங்கிவிட்டாராம் நடனப்புயல். அந்த புரொடியூசர் புண்ணியவான் யாருன்னு கோடம்பாக்கமே தேடிக்கிட்டு இருக்கு.

எனிவே இது ஒரு புறம் இருக்கட்டும் அதற்கிடையில் ரமேஷ் பி.பிள்ளை என்பவர் 8 டைரக்டர்கள் இயக்க 8 படங்களை தயாரிக்க உள்ளாராம். சிறப்பு வாழ்த்துகள். அதில் 3 படங்கள் பிரபுதேவாவை வைத்து எடுக்கப்பட உள்ளது என்கிற செய்திதான் சற்றும் வியப்பாக உள்ளது.

ஒரு ஹீரோவிற்கு இத்தனைப் படங்கள் வெயிட்டிங்கில் உள்ளது என்பது ஒரு தயாரிப்பாளருக்கு தெரியாதா? அப்படி தெரிந்தும் அவரை வைத்து 3 படங்களை எடுப்பதை துணிச்சல் என்று சொல்வதா?

தியேட்டர்காரங்களாவது வாடகை வாங்கிட்டு ஒரு ஷோவை ஓட்டி கொடுப்பாங்க. கல்லா கட்டாதுன்னு தெரிஞ்சா கிட்டவே வராதேன்னு கட் அண்ட் ரைட்டு கார்ப்ரேட் பார்ட்டி ஓடிடின்னு ஒலகத்துக்கே தெரியும்!

Leave A Reply

Your email address will not be published.