பத்து வருடங்களுக்கு முன்பு கழுகு என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சத்யசிவா. அதற்கு பிறகு அவர் இயக்கிய சவாலே சமாளி, கழுகு 2, 1945 படங்கள் எதுவும் தேறவில்லை. சிவப்பு என்கிற படம் ஓரளவுக்கு பரவாயில்லாமல் இருந்தது.
இப்போது ஒரு உருப்படாத படத்தை இயக்கி இருக்குறார். அதற்கு பெயர் நான் மிருகமாய் மாற… தலைப்பே விளங்காத தலைப்பு. தம்பிய கொன்றவர்களை அண்ணன் பழிவாங்கும் ஆதிகாலத்து கதைதான் இந்த படத்தின் கதை. கிராமத்தில் காதலர்களை சேர்த்து வைத்து வந்த சசிகுமாரை விட்டு நிறைய பேரை வெட்டி சாய்க்க வைக்கிறார். படம் முழுக்க ரத்தபொறியல்தான்.
சத்யசிவா படம் இயக்குவதை விட்டு விட்டு கசாப்பு கடை வைக்கலாம்.