தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் அஜீத்தும் ஒருத்தர். வருஷத்துக்கு ஒரு படம் பண்றார். 20 நாள் நடிக்கிறார். அப்புறம் ஊர் சுத்த கிளம்புறார். ஊர் சுத்துறது அவரோட உரிமை அதுல யாரும் தலையிட முடியாது. ஆனால் கோடிக் கணக்குல சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளருக்கு அவரு ஒத்தாசை பண்ணனுமா வேண்டாமா?. புரமோசனுக்கு வரமாட்டேன், பங்ஷனுக்கு வரமாட்டேன்னு அடம்புடிச்சா எப்படி-?.
பாதி படம் நடந்திட்டு இருக்கும்போது சாதனை படைக்க போறேன்னு பைக்க தூக்கிட்டு கிளம்பிடுறாரே. ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா அவரை நம்பி கோடி கணக்குல படம் போட்டவரு நிலைமை என்னான்னு அவர் நினைச்சு பார்த்திருக்காரா?
அதனால அஜீத் செய்ய வேண்டியது என்னன்னா? வருஷத்துல 6 மாதம் சினிமாவுக்கு ஒதுக்கி படத்தை முடிச்சு கொடுத்து புரமோசனுக்கு உதவி, ரசிகர்களை சந்திச்சு, மீடியாவ சந்திச்சு அந்த வேலையை முடிச்சுப்புட்டு. மீதி 6 மாதம் உங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்ணிக்குங்க. இல்லன்னா சினிமாவை விட்டு விலகி செல்லுங்க. இப்படி ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலுன்னு நிக்காதீங்க.
இது பல தயாரிப்பாளர்களோட புலம்பல். அதைத்தான் இங்க போட்டிருக்கோம்.