சூரக்கோட்டை சிங்கக்குட்டி மாதிரி வாழ்ந்தவர் சிவாஜி. சென்னையில் உள்ள அவரது அன்னை இல்லம் லேண்ட் மார்க் ஏரியாக்களில் ஒன்று. அப்படிப்பட்டவரின் குடும்பம் இன்று படும்பாடு கஷ்டமாகத்தான் இருக்கு. சாந்தி தியேட்டரை இடித்து காம்பளக்ஸ் கட்டினாங்க. சிவாஜி புரொடக்ஷனை வித்துட்டதா சொன்னாங்க. சிவாஜியின் மகள்கள் சொந்த அண்ணன்கள் மீதே சொத்துக்காக வழக்கு போட்டாங்க.
இப்போது புதிதாக சிவாஜி குடும்பம் இதுவரை சந்திக்காத பிரச்சினையாக பண மோடி வழக்கு. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனபாக்கியம் எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 30 லட்சம் ரூபாய் கடன வாங்கி ஆட்டைய போட்டுருக்காரு சிவாஜி பேரன் துஷ்யந்த். அதுக்கு பதிலா தன் பேர்லேயும், தன் மனைவி அபிராமி பேர்லேயும் தலா 15 லட்சத்துக்கு செக் கொடுத்திருக்காரு. அதுக்கு அப்பா ராம்குமார் ஜாமீன் கையெழுத்து போட்டுருக்காரு. இரண்டும் காசில்லைன்னு திரும்பி வந்திடுச்சு.
பணம் கொடுத்தவங்க சும்மா இருப்பாங்களா… வழக்கு போட்டுட்டாங்க. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்பா ராம்குமார், மகன் துஷ்யந்த், மனைவி அபிராமி ஆகியோருக்கு ஜாமீனில் விடக்கூடிய பிடிவாரண்ட் உத்தரவு போட்டிருக்கு.
சிவாஜி குடும்பத்துல இல்லாத பணமா? எதுக்கு இப்படி அடுத்தவன் பணத்தை ஆட்டைய போடனும், அவமான படணும்னு நம்ம நெட்டிசன்பாய்ஸ் கேட்குறாங்க.