கடந்த ஆண்டு வெளிவந்து பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற தேன் படத்தின் இயக்குனர் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சரியாக சென்றடையும்.
பலதரப்பட்ட திரைப்பட ஜீரிகளிடம் இந்த கதையை ஒப்படைத்தபோது அவர்கள் படித்துவிட்டு இது இந்திய மக்களிடம் மட்டுமின்றி உலக மக்களிடம் சரியாக சென்றடையும் என்று பாராட்டியுள்ளார்கள்.
இதுவும் விருதை நோக்கி நகர்கிறதா என்று எனக்கு தெரியாது கண்டிப்பாக மக்களுக்கான படமாக இது இருக்கும். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளோம். இதற்கான ஆர்டிஸ்ட் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது. என்றார்.