நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் என் வினோத் மற்றும் போனிகபூர் மூன்றாவது முறையாக இணைத்திருக்கும் திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாவனி, அமீர் மற்றும் சிபி ஆகியோர் நடித்துள்ளனர்.ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக்கில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இப்படத்தை பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது
இந்நிலையில், துணிவு படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் அஜித்திற்கு டூப்போட்ட நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அப்படின்னா அஜீத் ஆக்ரோஷமா சண்டை போடுறதெல்லாம் பொய்யா கோபால் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.