இந்திய திரைப்படத்துறையை காவி மயமாக்கும் அத்தனை முயற்சிகளையும் ஆளும் பா.ஜ.க அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் வருகிற ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா. கடந்த 14 ஆண்டுகளாக சத்தமில்லாமல் இந்த பட விழாவை இந்த ஆண்டு பெரிய விழாவாக நடத்துகிறார்கள். காவி சாயம் பூசிய படங்களை திரட்டி இந்த விழாவை நடத்துகிறார்கள். இதற்காக ஒரு டீம் இந்தியா முழுக்க சுற்றி வருகிறது.
அந்த டீம் சென்னைக்கும் வந்து சென்றிருக்கிறது. 5 தமிழ் படங்களை திரையிடப்போவதாக அறிவித்திருக்கிறது. பா.ஜ.வில் ஐக்கியமாகி உள்ள திரைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.