மாற்று திறனாளி பாடகிகை கொடுமைப்படுதிய சேடிஸ்ட் கணவர்

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த வைக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயலெட்சுமி. மலையாள படங்களின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார் விஜயலெட்சுமி. பிறந்தது கேரள மாநிலம் என்றாலும் 1981ஆம் ஆண்டு முதல் சென்னையில்தான் வசித்து வருகிறார்.

2014ம் ஆண்டு வெளியான குக்கூ படத்தில் இடம் பெற்ற கொடையில மழை போல என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து காடு படத்தில் உச்சிமலை காடு, வெள்ளைக்கார துரை படத்தில் காக்கா முட்டை, இடம் பொருள் ஏவல் படத்தில் எந்த வழி, ரோமியோஜூலியட் படத்தில் இதற்குதானே ஆசைப்பட்டாய் , பத்து எண்றதுக்குள்ள, தெறி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வீர சிவாஜி, அறம், தொண்டன், கனா, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

விஜயலெட்சுமி. பிறவிலேயே பார்வையற்ற மாற்றுத் திறனாளியான வைக்கம் விஜயலெட்சுமிக்கு 2016ஆம் ஆண்டு பஹ்ரைனை சேர்ந்த டெக்னிஷியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லவில்லை. இடையிலேயே நின்று போனது. அதன்பிறகு அனுப் என்ற மிமிக்ரி கலைஞரை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்தார் வைக்கம் விஜயலெட்சுமி. கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் தனது முன்னாள் கணவர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:திருமணத்திற்கு பிறகுதான் அவர் ஒரு சேடிஸ்ட் என்பது தெரியவந்தது , அவர் எப்போதும் தன்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்.

என்னை மட்டுமே நம்பி இருந்த எனது பெற்றோரிடம் இருந்து என்னை பிரித்ததார், தான் சினிமாவில் பாடவும் மேடை கச்சேரிகளில் பங்கேற்கவும் பல்வேறு தடைகளை விதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரது கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால்தான் பிரிய வேண்டியது வந்தது. என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.