எல்லாமே ஓசிதான்: நடிகைகளின் மாலத் தீவு ரகசியங்கள்

எல்லா நடிகைகளுமே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாலத்தீவுக்கு ஒரு விசிட் அடித்து விடுகிறார்கள். அங்கு சென்று அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை தங்களது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிடுகிறார்கள்.

அப்படியென்ன மாலத்தீவு மோகம் என்றால் ஓரளவுக்கு புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றால் அவர்களின் விமான டிக்கெட் முதல் குடிக்கிற கூல்ட்டிரிங்ஸ், ஹாட் டிரிங்ஸ் வரை அத்தனையும் ஓசிதான்.

மாலத்தீவு சுற்றுலாத்துறையும், அங்குள்ள ஒட்டல்களும் இணைந்து இந்த கைங்கரியத்தை செய்கிறது. அவர்கள் போடும் ஒரே கண்டிசன் விதவிதமான போட்டோக்கள் எடுத்து அது மாலத்தீவில் எடுக்கப்பட்டது என்ற குறிப்போடு வெளியிட வேண்டும் என்பதுதான்.

இதன்மூலம் சுற்றுலாத்துறைக்கு விளம்பரம் கிடைக்கிறது. நடிகர் நடிகைகள் தங்கள் படங்களை இன்ஸ்டாகிராமில் போடுவதால் அதற்கும் பணம் கிடைக்கிறது.

நடிகைகள் ஆண் நண்பர்களுடன் சென்றாலும், நடிகர்கள் பெண் நண்பர்களுடன் சென்றாலும் ரகசியம் காக்கப்படும் என்பது கூடுதல் சலுகை.

Leave A Reply

Your email address will not be published.