சமீபத்தில் மிகவும் பிரபலமான ” ஊ அண்டா வா ” தெலுங்கு பாடலை பாடிய “இந்ரவதி சௌகான்” தமிழில் ” என்ஜாய் ” என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
“சங்கு சக்கர கண்ணு” என்கிற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார். பாடலை விவேகா எழுதியிருக்கிறார்.ரயான் இசையமைத்துள்ளார்.இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழில் பாடுவது பெரும் விருப்பமாகவுள்ளதாகவும், தொடர்ந்து தமிழில் பாட வாய்ப்புகள் வருவதாகவும் இவர் தெரிவித்தார்.