ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் அரசுப்பள்ளியில் படிக்கும் அந்த பகுதிகளில் வாழும் ஏழை மாணவ, மாணவிகள் 10 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆர்யா அவர்களால் சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும் படக்குழுவினர், கிராமத்து மக்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் இணைந்து, ஆர்யா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.