சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் வழக்கம் போல தான் எங்கிருக்கிறேன் என்பதை கூட சொல்லாமல் எஸ்கேப் ஆனார். அவர் வீட்டு முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து சொல்ல காத்திருந்தார்கள் அப்போது வெளியில் வந்த லதா ரஜினிகாந்த் “சார் ஊரில் இல்லை உங்கள் வாழ்த்துக்கு நன்றி போய் வாருங்கள்” என்று அனுப்பி வைத்தார்.
நேற்று மாலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ஆனால் அவர் தனது வீட்டில் பேரண்களுடன் பிறந்தநாள் கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் கொடுக்கும் டிக்கெட் பணத்தில்தான் ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் பிறந்தநாள் அன்றாவது அவர்களின் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை ஏற்பது தான் தார்மீக மரபாகும் ஆனால் அதைக் கூட செய்ய ரஜினி தயாராக இல்லை என்பதுதான் ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.