கோடிக் கணக்கில் பணம் குவிந்து கிடப்பதால் சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு 60 வயதுக்கு மேல் சினிமா ஆசை வந்தது . அதீத மேக்அப், டோப்பா முடி என காஸ்ட்லியான காமெடியனாக தி லெஜண்ட் படத்தில் நடித்தார். அண்ணாச்சிக்கு பல கோடி நஷ்டம் என்றாலும் குவிந்து கிடக்குறதல கொஞ்சம் குறைஞ்சதுன்னு அவரும் சிரிச்சிக்கிட்டே இருந்தார். படத்தால் நன்றாக வாழ்ந்தது இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி.
அடுத்து படம் நடிக்க அண்ணாச்சிக்கு ஆசை இருந்தாலும் குடும்பத்துக்குள்ள குழப்பம் இருக்குறதா சொல்றாங்க. இந்த நிலையில் கோயம்புத்தூருக்கு சென்ற அண்ணாச்சி அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது மக்கள் அழைத்தால் அரசியருக்கு வருவேன் என்று அடுத்த குண்டை தூக்கி போட்டிருக்கிறார்.
அண்ணாச்சி அங்கு மலர்ந்த திருவாய் இது: சென்னை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறதோ அதேபோல் கோயமுத்தூரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி கோயம்புத்தூர் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும்.
தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வரவேன். இன்றைய அரசியல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.