வரவர சினிமா விழாக்கள் நாய்சண்டை களங்களாக மாறிக்கிட்டிருக்கு. சமீபத்துல கட்சிக்காரன்னு ஒரு படத்தோட பங்ஷன் பிரசாத் லேப்புல நடந்துச்சு. வழக்கம்போல சினிமாவை காக்க வந்த கே.ராஜன் வாங்குன 5 ஆயிரம் ரூபாய்க்கு கத்தி பேசிக்கிட்டிருந்தார். எங்கிருந்தோ வந்த பாலியல் செய்தி வியாபாரி பயில்வான் ரங்கநாதன் “இப்போ என்னை பற்றி பேசு பார்ப்போம்” என்று மல்லுக்கு நின்னார். கே.ராஜனும் “போடா மாமா பயல”ன்னு சொல்லி தன் பங்குங்கு கச்சேரி செஞ்சார். பாவம் காசு செலவு பண்ணின பங்ஷன் நடத்துல தயாரிப்பாளர் இரண்டு பேரு பஞ்சாயத்தையும் தீர்த்து வைக்க படாத பாடு பட்டார்.
இரண்டு பேச்சு வியாபாரிகளும் மோதிக்கிட்டதை பத்திய யாரும் சீரியசா எடுத்துக்கல.
Prev Post
Next Post