ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கிய எமி ஜாக்சன்

விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் படம் ‘அச்சம் என்பது இல்லையே’. தற்போது படம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது
படத்தின் தற்போதைய படப்பிடிப்பு குறித்து இயக்குநர் விஜய் கூறியிருப்பதாவது, “செப்டம்பர் மாதத்தில் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. பின்பு, 3.5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் பிரம்மாண்டமான லண்டன் சிறையை செட் அமைத்து அங்கு படத்தின் பெரும்பாலான பகுதியை படமாக்கினோம்.
இந்தக் கதை முழுவதும் ஆக்ஷன் மற்றும் எமோஷன்களால் பின்னப்பட்டது. இது இரண்டையும் சரியான விதத்தில் வெளிப்படுத்தும் ஒரு நடிகரை தேடியபோது, இதை சரியாக செய்யக்கூடியவர் அருண் விஜய் என தோன்றியது. அதை படத்தில் சிறப்பாகவும் செய்திருக்கிறார். ஏமி ஜாக்சன் லண்டன் சிறையின் ஜெயிலராக நடித்திருக்கிறார். மேலும், அவருக்கும் சில ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. மீண்டும் அவரை கேமரா முன் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. நிமிஷா விஜயன் படத்தின் இன்னொரு ஈர்க்கக் கூடிய விஷயமாக இருப்பார்.என்றார்.
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் ஜெயிலராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
