தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா

திரு டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா இன்று (5th Dec) நடைபெற்றது

தலைவர் – டி.ராஜேந்தர்
செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ்
செயலாளர் – JSK. சதிஷ் குமார்
பொருளாளர் – K.ராஜன்
துணை தலைவர் – P.T. செல்வ குமார்
துணை தலைவர் – R. சிங்கார வடிவேலன்
இணை செயலாளர் – K.G. பாண்டியன்
இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ்
இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர்

1. புதிய, சிறிய படத்தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்

2. VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்க்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.

4. F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஓட்ட முயற்சி மேற்கொள்வோம்.

5. பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம்.

தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான திருமதி உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினராக
இணைகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.