தமிழ் நாட்டில் மிக மலிவான விருதென்றால் அது கலைமாமணி விருதுதான். கலைமாமணி விருது வாங்கணும்னா அரசாங்கத்துக்கு, ஆளுங்கட்சிக்கு வேண்டியவங்களா இருக்கணும். அதுதான் இப்போதைய நிலைமை.
கலைமாமணி விருது வாங்குறதுக்கு ரேஷன் கடை கியூ ரேன்ஞ்சுக்கு வரிசையில் நின்றதெல்லாம் கலைந்த காட்சிகள். இதை கொஞ்சம் தட்டிக் கேளுங்க யுவர் ஆனர் என்ற ஒருத்தர் கேஸ் போட்டார். இதுபற்றி என்னப்பா சொல்றீங்க என்று கோர்ட் அரசாங்கத்தை கேக்க. அரசாங்கம் ரொம்ப பவ்யமாக இனிமே பார்த்து நடந்துக்குறோம் யுவர் ஆனர். தப்பானவங்களுக்கு கொடுதிருந்தா திருப்பி வாங்கிடுறோம்னும் சொல்லிருச்சு.
இதுக்காக அரசாங்கம் ஒரு குழு அமைச்சு ஆராய போவுது. குழு மட்டும் சரியா வேலை செஞ்சா முக்கால்வாசி கலைமாமணி விருது அரசாங்கத்துக்கு திரும்பி போயிடும். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.
======================