விஜய் சேதுபதி உருப்படாம போறதுக்கு காரணமே பணத்துக்காக படம் பண்றதும், நட்புக்காக படம் பண்றதும்தான். இதுல இந்த படம் ரெண்டாவது வகை ஒரு பெரியசேனல் நிறுவனம் விஜய்சேதுபதிக்கு நிறைய சம்பளம் கொடுத்து புக் பண்ணின படம்தான் இது. காலப்போக்குல இந்த படத்தோட கதையையும், அதை படமாக்குன பொன்ராமின் லட்சணத்தையும் பார்த்த சேனல் நைசாக நழுவி ஒரு என்ஆர்ஐ பார்ட்டி தலையில படத்தை கட்டிவிட்டுட்டு கழண்டுகிச்சு.
உள்ளூர் தாதா, ஹீரோ விஜய்சேபதியோட தங்கச்சி கல்யாணத்துக்கு வந்த பிரண்டுகளை அடிச்சுடுறார். ஹீரோ சும்மா விடுவாரா மார்க்கெட்டுல பல நூறு பேருக்கு முன்னாடி வில்லனை துவம்சம் பண்ணிடுறாரு வில்லனுக்கு மானமே போயிடுச்சு. அப்புறமா வில்லன் விஜய்சேதுபதியை சம்பவம் செய்றதுக்கு நாள் பார்த்துக் கொண்டிருக்குபோது வெளியூருக்கு எஸ்கேப் ஆகி இரண்டு வருஷம் கழிச்சி டிஎஸ்பியா அதே ஊருக்கு திரும்பி வர்றாரு ஹீரோ. எப்படி வர்றாருன்லாம் கேக்கப்டாது ஏன்னா? இது சினிமா.
வந்த பிறகு எப்படி ரெண்டு பேரும் மோதிக்கிறாங்க ன்னு நாம பல படத்துல பார்தத்தான் எடுத்திருக்காரு பொன்ராம். கையில நிறைய காசு இருந்து செலவு பண்ண வழி தெரியாம இருக்குறவங்க போயி பாருங்க.