விலை உயர்ந்த நாய்களைத் திருடி, உரிமையாளர்களிடம் பணம் பறிக்கிறார், இந்தியாவின் முதல், ‘நாய் கிட்னாப்பர்’ நாய்சேகர் வடிவேலு. தங்கள் வீட்டில் இருந்த அதிர்ஷ்ட நாயை, வேலைக்காரன் திருடிச் சென்று கோடீஸ்வரனாகிவிட்ட பிளாஷ்பேக்கை வடிவேலுவிடம் சொல்கிறார் பாட்டி சச்சு.
பணத்துக்காக நாய்களை கடத்தும் சேகர்,சொந்த நாயை மீட்டாரா, இல்லையா என்பதுதான் படம்.
வடிவேலு கம்பேக் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்ட படம் கோ பேக் வடிவேலு என்று சொல்ல வைத்திருக்கிறது. இனி வடிவேலு கமெடி எடுபடாது என்பதை படம் தெளிவாக காட்டிவிடுகிறது.
வடிவேலு இத்தோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டால் இருக்கிற மரியாதையாவது மிஞ்சும்.