பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டாமா? கணெக்ட் படம் வெற்றியாம் நயன்தாரா சொல்கிறார்.

நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கேர் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கிய திரைப்படம் கனெக்ட். இப்படம் டிசம்பர் 22ந் தேதி திரையரங்கில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது. படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்து இருந்தார்.

வெளியாகி மூன்றே நாளில் தியேட்டரில் காத்து வாங்கிய இந்த படம் வெற்றி படம் என்றும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு இந்த ஆண்டு ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாகும். ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். எங்களின் கனெக்ட் படத்தை பார்த்து ஆதரவளித்த அனைத்து திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
மேலும்,கனெக்ட் திரைப்படத்தில் பார்வையாளர்களை மனதில் வைத்து, ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் பணியாற்றினோம். என்னை நம்பி என்னுடன் இருந்ததற்காக எனது இயக்குனர் அஷ்வின் சரவணன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. உங்களின் இயக்கத்தில் நான் நடித்ததில் பெருமை அடைகிறேன் உங்களின் இயக்கம் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது.

கனெக்டபடத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனுக்கும், ரவுடி பிக்சர்சுக்கும் அன்பு கலந்த நன்றி. உங்கள் அன்பு, ஆதரவு, கருத்து, விமர்சனங்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இனி வரும் காலங்களில் எங்களின் புதிய முயற்சிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று நம்புகிறோம். ரசிகர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை உங்களின் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

இவ்வாறு அந்த அறிக்கையில் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். பொய் சொன்னாலும் பொருந்துகிற மாதிரி சொல்ல வேண்டாமாய்யா என்கிறான் நெட்டிசன்

Leave A Reply

Your email address will not be published.