ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது மீண்டும் படங்களை இயக்க வந்துவிட்டார். பல ஆண்டுகள் கழித்து அவர் இயக்கவிருக்கும் படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் தான் லால் சலாமுக்கு புது பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். அந்த படத்தின் பூஜை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. பூஜையில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அந்த பூஜையில் லால் சலாம் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான
பூர்ணிமா ராமசாமியும் கலந்து கொண்டார்.
பூஜையின்போது வைக்கப்பட்ட பேனர்களில் ஆடை வடிமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி என அவரின் பெயர் இருந்தது. இந்நிலையில் லால் சலாம் படத்தில் இருந்து விலகிவிட்டதாக பூர்ணிமா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ப்ரீ ப்ரொடக்ஷன் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நான் லால் சலாம் படத்தில் வேலை செய்யப் போவது இல்லை. எதிர்காலத்தில் அனைத்து போஸ்டர்களில் இருந்தும் என் பெயரை நீக்குமாறு லைகா நிறுவனம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.