மலையாள சூப்பர் ஹிட் படமான ‘மாளிகப்புரம்’ வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது.மிகுந்த எதிபார்ப்புகுரிய இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சிறப்பு காட்சி நடைப் பெற்றது. முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடை பெற்றது. படத்தில் இடம் பெற்ற கலைஞர்கள் பேசினார்கள். ஹீரோ நடிகர் உன்னி முகுந்தன் பேசியதாவது:
மாளிகப்புரம் என்னுடைய மற்ற படங்களைப் போல் வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான படமாக மாளிகப்புரம் இருக்கும். இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
எனக்கு ஒரு நல்ல குடும்ப படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் ஐயப்பன் பக்தன்தான். இறுதிக் காட்சியில் என்னை மாற்றிக் கொள்ளும் அருமையான காட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
ஒரு சிறுமி ஐயப்பன் கோவிலுக்கு போக வேண்டும் என்று ஆசைப் படுகிறாள். அவர் எப்படி சென்று வருகிறாள் என்பதே படத்தின் ஒருவரி கதை. தேவ நந்தா மற்றும் குட்டிபையன் என்னுடன் 50 நாட்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
12 வருடங்களுக்கு முன்பு சீடன் படத்திற்காக இங்கு வந்தேன். அப்போது தனுஷ் சாருடன் சிறந்த அனுபவம் கிடைத்தது. அந்த படத்திற்கு ஆதரவு கொடுத்தது போல் இந்த படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.