வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் ‘வெங்கி 75’ எனும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘ஹிட்’ எனும் பெயரில் வெளியான முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி வெற்றிப் பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் ‘வெங்கி 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக வெங்கடேஷ் நடிக்கிறார். ‘எஃப் 3’ எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார்

இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.