நடிகர் விஷாலுக்கு தொடர்ந்து தோல்வி படங்கள். எல்லா படத்திற்கு மே அவர் பெரிய பில்டப் கொடுப்பார். விபத்தில் சிக்குவார், சிகிச்சை பெறுவார், மருத்துவமனையில் சேருவார் இப்படி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து வெளிவரும் படம் படுதோல்வியை சந்திக்கும் ஆக்சன், லத்தி படங்களின் தோல்வியை இதற்கு உதாரணம்.
இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படங்களுக்கும் இப்போது பில்டப் விஷயங்கள் வரத் தொடங்கிவிட்டது.
ஒரு படத்தை உருப்படியாக தேர்வு செய்யாமல், உருப்படியான கதைகளை தேர்வு செய்யாமல் இருந்துவிட்டு தோல்வி படங்களை கொடுத்து கோடி கணக்கில் நஷ்டம் அடைந்து, பெரும் கடனாளியாக இருக்கும் விஷால் இனியும் திருந்தவில்லை.
மக்கள் நலப்பணி செய்கிறேன் தேர்தலில் நிற்க போகிறேன் அரசியலுக்கு வர மாட்டேன் என்ற அடிக்கடி மாத்தி மாத்தி பேசி பரபரப்பு உண்டு பண்ணுகிறார் அவ்வப்போது போட்டோ ஷூட் என்ற பெயரில் சின்ன குழந்தைகளை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த மாதிரியான நேரத்தில் தனது மார்பில் எம்ஜிஆரின் படத்தை பச்சை குத்தி எல்லோரையும் பயமுறுத்தி இருக்கிறார். “ஒரு படத்தை வெற்றி பெற வைக்கிற வழியை பார்க்காமல் இப்படி தேவையில்லாத வீண் வேலைகளில் ஈடுபட வேண்டாம்” என்று விஷாலை நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.