தியேட்டர்காரங்களும் பரபரப்புக்கு அலையுறாங்க

நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபீஸா நடித்துள்ள படம், ‘கனெக்ட்’. அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இந்த சரவணன்தான் மாயா படத்தை இயக்கினவர்.

கொரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. தன் மகளுக்குப் பிடித்துள்ள பேயை, நயன்தாரா எப்படி விரட்டுகிறார் என்பது படம். வரும் 22 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

99 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்திற்கு இடைவேளை இல்லை என இயக்குநர்தெரிவித்திருந்தார். இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேன்டீன் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால், இடைவேளை இல்லாமல் படத்தைத் வெளியிட முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் அவர்களே இடைவேளை விட்டுவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தியேட்டர்காரங்களிடம் ரசிகர்கள் கேட்பது என்னவென்றால் ஹாலிவுட் படங்களுக்கும் இடைவேளை கிடையாது. நீங்களாவே ஒரு இடைவேளை விட்டுறதில்லையா? அது மாதிரி விட்டுட்டு போகவேண்டியதுதானே இதப்போயி பெருசா பேசிகிட்டிருக்கீங்க. நீங்களும் பரபரப்புக்கு அலையுற மாதிரில்ல தெரியுது.

Leave A Reply

Your email address will not be published.