சிவாஜி விழாவில் இளையராஜாவுக்கு ஜால்ரா போட்ட முத்துலிங்கம்

முனைவர் மருதுமோகன் எழுதிய நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குறித்த சிவாஜிகணேசன் என்ற நூல் அறிமுகவிழா இன்று சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினார்களாக இசைஞானி இளையராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநர் கே. பாக்யராஜ், சிவாஜியின் புதல்வர்கள் பிரபு, ராம்குமார், பேரன் விக்ரம் பிரபு. கவிஞர் முத்துலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் முத்துலிங்கம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா பற்றியே அதிகமாக புகழ்ந்து பேசி கொண்டு இருந்தார். அவர் சிவாஜி பற்றி பேசுவார் என்று காத்திருந்த ரசிகர்கள் அப்படி பேசாததால் வெறுப்படைந்தனர். அதனால் அரங்கில் இருந்த சிவாஜி தொண்டர்களும், ரசிகர்களும், அபிமானிகளும் முத்துலிங்கத்தின் பேச்சுக்கு இடையே குறுக்கிட்டனர்.

அவர்கள் எழுந்து நின்று,”சிவாஜி ஐயாவைப் பற்றி பேசுங்க” எனச் சத்தம் போட்டனர். அதற்குப் பிறகும் பேசாத முத்துலிங்கம், சிவாஜி பற்றிதான் ஊருக்கே தெரியுமே என பதிலுக்குச் சொன்னார். இதனால் மீண்டும் அரங்கத்தில் சலசலப்பு உண்டானது. திரும்பவும் ஒரு சிலர் எழுந்து, “சிவாஜி பற்றி பேசுங்க” என குரல் எழுப்பினர். அதனால் கோபம் அடைந்த முத்துலிங்கம் கோபம் கொண்டு, “யோவ் போய்யா” என மைக்கில் கூறிவிட்டு போய் உட்கார்ந்து விட்டார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை இளையராஜா ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.