நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 22-ந் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தை மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா உடன் சத்யராஜ், வினய் ராய், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் நடித்திருந்தார்கள். அதுமட்டுமின்றி இப்படத்தை நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்து உள்ளார். வழக்கமாக படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுக்கும் நயன்தாரா தனது கணவர் தயாரித்த படம் என்பதால் கனெக்ட் படத்திற்கு மட்டும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் புரமோஷன் செய்தார்.
இவ்வாறு நயன்தாரா தீயாய் வேலை செய்வதை பார்த்தால் படம் வேறலெவலில் இருக்கும்போல என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ், தெலுங்கில் வெளியான சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு ஓட்டம் பிடித்தது.
நயன்தாரா புரமோட் பண்ணினால் படம் ஓடிடுமா படத்துல விஷயம் இருக்கணும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.